சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக சின்னதுரை போட்டி: கட்சித் தலைமை அறிவிப்பு!

சென்னை: ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில்  தயாராகி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதி என உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தத்தில் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டு, அவருக்கு மாற்றாக, சின்னதுரை போட்டியிடுவார் என, திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே திருமதி ஜீவா ஸ்டாலின் அவர்களின் பெயர் அறிவிக்கப் பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது திரு. கு.சின்னதுரை, பி.இ., , அவர்கள் 82. ஆத்தூர் (தனி) தொகுதி தி.மு.கழக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக சின்னதுரை போட்டி: கட்சித் தலைமை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: