கொளத்தூர் தொகுதியில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நேற்று பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்படி திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் மாற்று வேட்பாளரான கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் சுயேச்சைகள் 4 பேர் என 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுபோல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி. சேகரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் லட்சுமி நராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மெர்லின் சுகந்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருவிக நகர் தொகுதியில் 2 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்….

The post கொளத்தூர் தொகுதியில் 6 பேர் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: