முன்னாள் பேராசிரியை தீப்பிடித்து எரிந்து சாவு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், சேஷாத்திரி பாளையம் பழனி தெருவை சேர்ந்தவர் சரவணபவன் ( 70). இவரது மனைவி ஜெயலட்சுமி (67). கல்லூரி பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். கணவன், மகளுடன் வசித்து வந்த ஜெயலட்சுமி தனது வீட்டில் பூஜை செய்வதற்காக கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. ஜெயலட்சுமி சத்தம் போட்டதை கேட்டு அவரது கணவர், அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் போராடிய ஜெயலட்சுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கும். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …

The post முன்னாள் பேராசிரியை தீப்பிடித்து எரிந்து சாவு appeared first on Dinakaran.

Related Stories: