அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

சென்னை: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஆறுபடை வீடு வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. முதலாமாண்டு மாணவர்களுக்கு துறையின் மூத்த மாணவர்கள் வாழ்த்து அட்டை மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பூஜை மற்றும் குத்துவிளக்கேற்றத்துடன் தொடங்கிய விழாவுக்கு உயிர் வேதியியல் துறையின் துணை பேராசிரியர் செல்வி வரவேற்புரை வழங்கினார். துறையின் டீன் மற்றும் இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் பாராட்டுரை வழங்கினார். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் மருத்துவர் அனுராதா கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்….

The post அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: