பாஜவில் சசிகலாவை இணைக்க எந்த நடவடிக்கையும் இல்லை: மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேச்சு

சென்னை: பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட பாஜ சார்பில், தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜ துணைத் தலைவர் கரு நாகராஜன் கூறியதாவது:‘‘பாஜ ஆட்சிக்கு முன் 51 லட்சம் நிறுவனங்கள் உற்பத்தி பிரிவில் இருந்த நிலையில் அவற்றின் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் பல புதிய நிறுவனங்கள் உருவாகி பொருளாதாரம், தொழில் வேலை வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு மாநிலங்களிலும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. தமிழகத்திலும் அந்த கோரிக்கைக்கு எதிராக பாஜ இருக்காது. மாநில தலைவர் அதுகுறித்து தகுந்த நேரத்தில் அறிக்கை வெளியிடுவாார். முல்லை பெரியாறு, காவிரி உட்பட பல பிரச்னைகளில் பாஜதான் தமிழக மக்களுக்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் துவங்கி பல பிரச்னைகளில் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தீர்வு கண்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதையெல்லாம் மறந்துவிட்டு பேசுவது வேதனை அளிக்கிறது. பாஜவில் சசிகலாவை இணைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 8 ஆண்டுகளில் 7.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி பாக்கி 14,000 கோடி ரூபாய் கொடுக்கவில்லை எனக்கூறுவது எந்த விதத்தில் நியாயம். சமீபத்தில் வெளிவந்த செய்தியில் கூட 9,600 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது; இதற்கு மேல் ஜிஎஸ்டி வரியில் எந்த நிலுவை தொகையும் கொடுக்க வேண்டியது இல்லை’’ என பேசினார்….

The post பாஜவில் சசிகலாவை இணைக்க எந்த நடவடிக்கையும் இல்லை: மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: