ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி: ரஷித் கான் ராஜினாமா

காபூல்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கேப்டனாக ரஷித் கான் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் 2 மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 20 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது கேப்டன் என்ற முறையில் தேர்வு குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். கலந்தாலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்றார். இதையடுத்து புதிய கேப்டனாக முகமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி: ரஷித் கான் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: