மகேஷ்பாபுவுடன் தியேட்டரில் படம் பார்த்த பிரியங்கா சோப்ரா

 

சென்னை: மகேஷ்பாபுவுடன் சேர்ந்து பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதி தியேட்டரில் படம் பார்த்தனர்.இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் ‘வாரணாசி’ பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மால்டி மேரியுடன் இணைந்து இந்த மூவி நைட்டை என்ஜாய் செய்துள்ளார்.

அவர்கள் மூவரும் இணைந்து மகேஷ்பாபுவுடன் படம் பார்த்துள்ளனர். இந்நிகழ்வை, மகேஷ் பாபுவுக்குச் சொந்தமான ஏஎம்பி சினிமாஸ் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. புகைப்படத்தில் பிரியங்கா வெள்ளை நிற ஆடையிலும், நிக் ஜோனஸ் கேஷுவல் உடையிலும், மகேஷ் பாபு கருப்பு நிற ஆடையிலும் காட்சியளிக்கின்றனர். இவர்கள் கிரிஸ்டோபர் நோலனின் ஒடிசி படத்தை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: