ஹாலிவுட் படங்களில் முதலிடம் இந்தியாவில் அவெஞ்சர்ஸ் வசூல் சாதனையை முறியடித்த ஸ்பைடர்மேன்

 

புதுடெல்லி: மார்வெல் நிறுவனத்தின் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படம் இந்தியாவில் நேற்றுமுன்தினம் வெளியானது. டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, சேடி சிங்க், ஜேக்கப் பட்டலோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைக்கேல் ஜியாச்சினோ இசையமைத்துள்ளார்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இந்தியாவின் முதல் நாள் வசூல் விவரத்தை படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.73 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களிலே முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் மாறியுள்ளது. இப்படத்திற்கு முன்பு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம் ரூ.60 கோடி வசூலுடன் முதல் இடத்தில் இருந்தது. அதனை தற்போது ஸ்பைடர் மேன் படம் முறியடித்துள்ளது.

Related Stories: