ஸ்டாண்ட்-அப் காமெடியன் ‘விக்கல்ஸ்’ விக்ரம், ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா நடித்துள்ள படம், ‘லைட் வெயிட் பேபி’. இதன் வசனங்களை ‘விக்கல்ஸ்’ விக்ரம் எழுதியுள்ளார். படம் குறித்து கே.சி.குரு கூறுகையில், ‘படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது’ என்றார். ‘விக்கல்ஸ்’ விக்ரம் கூறும்போது, ‘ஹீரோவாக அறிமுகமாகிறேன். உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்’ என்றார். ஆரத்தி கிருஷ்ணா கூறுகையில், ‘ஃபிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல்ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், நடிப்பு என்னை உணர்வுரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது.
இந்த கேரக்டரில் நடித்தது, எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய படக்குழுவினருக்கு மிகவும் நன்றி. பார்வையாளர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், வரும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
