நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் ராம் சரண்

தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் நடித்த ‘பெத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பில், எதிர்பாராவிதமாக ஏற்பட்ட ஒரு விபத்தில், அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பிறகு நடந்த மருத்துவ பரிசோதனையில், உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கோவையிலுள்ள மருத்துவமனையில் ராம் சரண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தலைவரும், எலும்பியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.ராஜசேகரன் தலைமையில் ராம் சரணுக்கு நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா கொனிடேலா, ராம் சரண் மனைவி உபாசனா கொனிடேலா உடனிருந்தனர். இந்நிலையில், ராம் சரணுக்கு சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ராம் சரண், நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.

Related Stories: