சென்னை: ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். நடிகை என்பதை தாண்டி அவர் தற்போது தொழில் முனைவோராக மாறியுள்ளார். நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி அகர்வால், கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘ஓக்கூ’வை (OKUU) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். ‘ஓக்கூ’ என்பது தாவர அடிப்படையிலான பிரீமியம் புரோட்டீன் பார் ஆகும். இதற்காக 5 ஆண்டுகள் ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், ‘உடல்தகுதியை பராமரிப்பதிலும், திரைப்பட பணிகளை சமநிலைப்படுத்துவதிலும் ஏற்பட்ட அனுபவங்களே, எனக்கு இந்தியாவில் தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. இது எனது கனவுத் திட்டம்’ என்றார்.
