சென்னை: சமீபத்தில் அஜித் படம் உள்பட 4 படங்களை நிராகரித்துள்ளார் ஸ்ரீலீலா. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் ஸ்ரீலீலாதான் ஹீரோயினாக நடிக்க இருந்தார். அவர் கால்ஷீட் தருவதில் பிரச்னை இருப்பதாக சொன்னதால், இப்போது கயாடு லோஹர் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அகில் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘லெனின்’ படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதிலும் ஸ்ரீலீலாதான் முதலில் தேர்வானார்.
ஆனால் அதிலும் நடிக்க மறுத்தார். அதன் பிறகே பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்தார். விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’ படத்துக்காகவும் ஸ்ரீலீலா பேசப்பட்டார். ஆனால் அதிலும் நடிக்க அவர் மறுத்துவிட்டார். தெலுங்கிலேயே மற்றொரு படமான ‘அனகனக ஒக்க ராஜு’ படத்துக்காக ஸ்ரீலீலாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. தன்னிடம் கால்ஷீட் இல்லை என அவர் கைவிரித்துவிட்டார்.
தொடர்ந்து இதுபோல் தமிழ், தெலுங்கில் 4 படங்களை அவர் நிராகரித்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்ததில், டாக்டர் படிப்பை முடித்திருக்கும் ஸ்ரீலீலா, இன்டென்ஷிப் வேலைக்காக செல்கிறாராம். இதனாலேயே அவர் புது படங்கள் எதுவும் ஏற்காமல் இருப்பதாகவும் விளம்பர படங்களை மட்டும் ஏற்பதாகவும் அவரது நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
