மும்பை: கெவின் ஸ்பேசி இயக்கத்தில், செர்ஜி டார்ச்சிலின் மற்றும் லாடோ ஒகோட்னிகோவ் எழுத்தில் உருவாகி, இந்த ஆண்டு திரைக்கு வரும் சூப்பர்நேச்சுரல் படம், ‘ஹோலிகார்ட்ஸ் சாகா – தி போர்ட்டல் ஆஃப் ஃபோர்ஸ்’. இதன்மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் திஷா பதானி கூறுகையில், ‘மேற்கத்திய நாடுகளில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கு வெறும் திறமை மட்டும் போதாது.
அங்குள்ள வாய்ப்புகள் அனைத்தும் தகுதி தேர்வுகள், முகவர்கள், அணுகல் முறை, விசா போன்ற பல சட்டப்பூர்வ தொழில்நுட்ப காரணங்களை சார்ந்தே இருக்கின்றன. இந்தியாவில் இருந்தபடியே இந்த கதாபாத்திரங்களை எளிதில் பெற்றுவிட முடியாது. இணையதளம் வழியாக தகுதி தேர்வுகளில் பங்கேற்க முடிந்தாலும், இங்கு தங்கியிருந்தால் மட்டுமே சிறந்த பட வாய்ப்புகளை பெற முடியும்’ என்றார். அவரது சர்ச்சைக்குரிய பேச்சை சிலர் ஆதரித்தும், பலர் கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
