சென்னை: இளையராஜாவின் அண்ணனும், மறைந்த தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’. காதல் பின்னணியில் உருவாகும் அழுத்தமான மியூசிக்கல் கதை கொண்ட இப்படத்தை எலிபெண்டைன் எக்ஸ் தயாரிக்கிறது. முக்கிய வேடங்களில் சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாளம், இந்துமதி மணிகண்டன், ரேஷ்மி, ரஞ்சித், ராம்குமார், மீனா, திலகவதி நடிக்கின்றனர். வெங்கட் பிரபு கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்ற, ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்ரமணியம் திரைக்கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். சாய் முனீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஷானு முரளிதரன் அரங்குகள் அமைக்கிறார். ஸ்ரீவாட்சன் எடிட்டிங் செய்ய, பிசி ஸ்டண்ட்ஸ் சண்டைக் காட்சிகளை அமைக்கிறது. ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கிறார்.
