பிகினி அணிந்தால் என்ன தப்பு..? மாளவிகா மோகனன் பாய்ச்சல்

சென்னை: தமிழில் தற்போது கார்த்தியுடன் ‘சர்தார் 2’, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இதுதவிர மலையாளம் மற்றும் தெலுங்கில் புதிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த பிரேக்கில் மாலத்தீவுக்கு டூர் சென்றுள்ளார் மாளவிகா மோகனன். அங்குள்ள கடற்கரையில் பிகினி உடையில் அவர் எடுத்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். இந்த போட்டோக்கள் வைரலான நிலையில், பலர் அவரது தோற்றத்தை பாராட்டினாலும், சிலர் அவரது உடை தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ‘பிகினி அணிவதில் என்ன தவறு? வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் சாதாரணமான விஷயம். அதே நேரத்தில், நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதிக்கவும் எங்களுக்கு தெரியும். எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்கு நன்கு தெரியும். எளிதாக யாரையும் விமர்சிக்காதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: