- சாம் சி எசின்
- சென்னை
- அருண்குமார் தனசேகரன்
- ஏகே திரைப்படத் தொழிற்சாலை
- ஜிவி பிரகாஷ்
- கயாடு லோஹர்
- மரியப்பன் சின்ன
- சாம் சி.
- செல்வி
சென்னை: ஏகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் ‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி.எஸ்., இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் நிரூபித்துள்ளார்.
கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன. இந்தப் பாடலை சாம் சி.எஸ். மற்றும் ரேஷ்மா ஷ்யாம் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஷாலி சி எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
