மேரேஜ் ஸ்டோரியில் மீண்டும் இணைந்த கூட்டணி

ரீல் பெட்டி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, சுனில் தேவ் எழுதி இயக்கியுள்ள படம், ‘மேரேஜ் ஸ்டோரி’. இதில் எஸ்.பி.சித்தார்த், ஷபானா ஷாஜகான் ஆர்யா, தீபிகா வெங்கடாசலம், நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் நடித்துள்ளனர்.

நட்பு, காதல், காமெடி கலந்த முழுநீள கமர்ஷியல் கதையுடன் படம் உருவாகியுள்ளது. தமிழ்ச்செல்வன் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். தமிழரசன் எடிட்டிங் செய்ய, மிராக்கிள் மைக்கேல் சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். முன்னதாக எஸ்.பி.சித்தார்த்தை வைத்து சுனில் தேவ் இயக்கிய படம், ‘அதோமுகம்’. இது 2024ல் திரைக்கு வந்தது. இந்நிலையில், மீண்டும் இந்த கூட்டணி ‘மேரேஜ் ஸ்டோரி’ மூலம் இணைந்துள்ளது.

Related Stories: