இந்த வார விசேஷங்கள்

27.12.2021 – திங்கட்கிழமை – காலபைரவ அஷ்டமி பொதுவாக அஷ்டமி திதியில் பல கஷ்டங்கள் வரும் என்று சொல்வார்கள். ஆனால் எந்த கஷ்டமும் வராமல் சுகம் பெறவேண்டும் என்று சொன்னால், அஷ்டமி திதியில் பைரவரை வணங்க வேண்டும். அஷ்டமி திதி கால பைரவருக்கு உரியது. அன்று  விரதம் இருந்து, மாலை  பைரவரை வழிபட வேண்டும். என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த எட்டாவது திதியில், பைரவ வழிபாடு நடத்துவதன் மூலமாக, நாம் எந்த உயரத்தையும் எட்டிவிடலாம்.29.12.2021 – புதன்கிழமை – மானக்கஞ்சாற நாயனார் குருபூஜைமயிலாடுதுறை பக்கத்திலே ஆனந்ததாண்டவபுரம் என்று ஒரு ஊர். அந்த ஆனந்த தாண்டவம் இப்பொழுது ஆனதாண்டவபுரம் என்று வழங்கப் படுகிறது. அந்த ஊரிலே வேளாளர் குலத்திலே மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். அரசனுக்கு சேனைத் தலைவராக பதவி வகித்தவர் சிவ நெறிச்செல்வர். இவருக்கு வெகுகாலம் பிள்ளை இல்லாமலிருந்தது. மிகவும் வருத்தத்தில் இருந்த அவர் சிவபெருமானை வணங்க, சிவபெருமானின் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பேரழகும் பெருங்குணமும் வாய்ந்த அந்தப் பெண் குழந்தையை பெருமை யோடு வளர்த்தார். அந்தப் பெண் குழந்தையும் நல்ல பண்போடு வளர்ந்தது.  உரிய வயது அடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த மணமகனைத் தேடினார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்ற ஒரு திருமகன் கிடைத்தார். அவர் குடும்பமும் சிவபக்தி நிறைந்த குடும்பம். மிகத் தகுதியான குடும்பம் .அப்படிப்பட்ட குடும்பத்தில் பெண் தருவது  குறித்து மானக்கஞ்சாற நாயனார் மனம் நெகிழ்ந்தார் .திருமண ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. மணமகனை வரவேற்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த நேரத்தில் வயதான சிவனடியார் ஒருவர் வந்தார். மாவிரத முனிவர் என்ற பெயருடையவர் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவுடன் மனம் மகிழ்ந்த மானக்கஞ்சாற நாயனார் அவருக்கு பல விதமான வரவேற்பு அளித்தார். பாதத்தில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். தன்னுடைய மகளையும் ஆசிபெற வைத்தார். மணமகளின் நீண்ட கூந்தலை பார்த்த அந்த முனிவர் அவளுடைய கூந் தலை அரிந்து கொடுத்தால் தமக்கு உதவும் என கேட்க, ஒரு சிவனடியார் கேட்டதை தராமல் இருப்பதா  என்று எண்ணிய மானக்கஞ்சாற நாயனார், உடனடியாக எதைப்பற்றியும் கவலைப்படாது,  சிவனடியார்  உள்ளம் மகிழ்விக்க வேண்டும் என்ற நினைப்போடு, தம்முடைய பெண்ணின் கூந்தலை அரிந்து சிவன் அடியவரிடத்திலே கொடுத்தார். இந்த விஷயங் களைக்  கேட்ட கலிக்காம நாயனார், தன்னுடைய மாமனாரின் சிவபக்தியை எண்ணி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியைக் காண கொடுத்து வைக்க வில்லையே என்று ஏங்கினார். இருந்தும் மண மகளைப் பார்த்த பொழுது அவள் தலை முடி இல்லாமல் இருந்தது குறித்து சற்றே மனம் கலங்கினார். அப்பொழுது அவருடைய உள்மனதில் அசரீரி ஒலித்தது. ‘‘கலிக் காமரே! உம் உள்ளத்துக்கு எந்தக் குறையும் இல்லை. உன் மனைவி  பூரண பொலிவோடு நீண்ட குழலோடு இருப்பாள்.” என்று சொல்ல அவளைப் பார்த்தால். அவள் சர்வ அலங்காரபூஷிதையாக கறுத்த குழலோடும் கலை மான்  விழியோடும் அற்புத அழகோடும் காட்சி தந்தாள். சாதாரண மனிதர்களின் செயலுக்கு அப்பாற்பட்ட அருஞ்செயல் புரிந்த சிவனடியார் மானக்கஞ்சாற நாயனாரின் குருபூஜை தினம் இன்று. அவர் குருபூஜையில் கலந்து கொள்வோம்.30.12.2021 – வியாழக்கிழமை – உற்பத்தி ஏகாதசிஒரு வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் உண்டு. சில வருடங்களில் 25 ஏகாதசிகள் வரும்.அதில்  தலையாய ஏகாதசி, மார்கழி மாதம், தேய் பிறையில் வருகின்ற ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் வருகின்ற ஏகாதசி இந்த ஏகாதசி என்பதால், இதற்கு “உற்பத்தி ஏகாதசி” என்று பெயர். ஏகாதசி  விரதமே இந்த நாளில் இருந்து தான் உற்பத்தியானது என்பதால் இதற்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர்.முரன் என்ற அசுரனோடு  திருமால் சண்டையிட்டார். சற்று நேரம் ஓய் வெடுக்க  ஆசிரமத்தில் ஒரு குகையில் இருந்தார். இதுதான் சமயம் என்ற அந்த முரன் வாளெடுத்து குகைக்குள் நுழைந்த பொழுது திருமாலின் சக்தியாக ஒரு பெண் எதிர்ப்பட்டாள். அந்தப் பெண் ஊங்காரத்தால் முரனை பஸ்பமாக்கினாள். கண்விழித்த திருமால் அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார். இந்த ஏகாதசி நாளில் யாரெல்லாம் திருமாலை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இகபர வாழ்வின் மேன்மை கிடைக்கும் என்று வரமளித்தார் .31.12.2021 – வெள்ளிக்கிழமை -துவாதசி – பிரதோஷம்மங்களகரமான மகாலட்சுமிக்குரிய  வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் துவாதசி பாரணையும் இணைந்து வருவது சிறப்பு. காலையில் துவாதசி பாரணை முடித்தவர்கள் அன்று பகலில் தூங்கக் கூடாது. பகவானை நினைக்க வேண்டும். மாலை நேரத்தில் பிரதோஷ பூஜைக்காக சிவாலயம் சென்று அபிஷேகங்களை கண்டு ஆராதனை செய்யலாம். வைணவர்கள் அன்று மாலை நேரம், பிரதோஷ காலத்தில், லக்ஷ்மி நரசிம்மரை தியானிப்பதன் மூலமாக எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்….

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: