ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ் கடவுள் பாடல்

சென்னை: முருகப்பெருமான் குறித்த ஆல்பம் பாடல்கள் பிரபலமாகி வருகின்றன. அந்தவகையில் விஜய்கிரண் இயக்கத்தில் சூரஜ் குமார் நடித்த ‘தமிழ்கடவுள்’ என்ற ஆல்பம் 1 மில்லியன் பார்வைகளை கடந்து பிரபலமாகி வருகிறது. சஞ்சய்மாணிக்கம் இசையமைத்துள்ளார். எஸ்.4 ஸ்டூடியோஸ் சார்பில் சதிஷ் குமார்.சி இந்த ஆல்பத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

தமிழ்கடவுள் ஆல்பம் குறித்து இயக்குனர் விஜய்கிரண் கூறியது: நான் ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவன் மகன். மைனா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரிடம் பல பல படங்களில் துணை, இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். எஸ்.ஏ.சி, பா.விஜய் நடித்த நையப்புடை என்ற படத்தை இயக்கி உள்ளேன். ஒரு முருகன் பாடல் பண்ணுவோம் என சூரஜ் ஐடியா கொடுக்க இந்த வேலைகளை தொடங்கினோம்.

முருககடவுள் பெருமை சொல்லும் இந்த ஆல்பத்தில் சூரஜ்குமார் ஆடிப்பாடியுள்ளார், நான் இயக்கி உள்ளேன். சஞ்சய்மாணிக்கம் பாடி இசையமைத்துள்ளார். சதீஷ் நடனம் அமைத்துள்ளார். தமிழ்கடவுள் பாடலை இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். காலம் கடந்து முருகன் பாடல்கள் மக்கள் நிலைத்து நிற்கும். தமிழ் கடவுள் ஆல்பமும் அப்படி பேசப்படும் என நம்புகிறோம். மொத்தம் ஐந்து பாடல்களை உருவாக்க நினைத்துள்ளோம். அடுத்தடுத்த மீதி 4 பாடல்கள் வரும் என்றார்

Related Stories: