கவுதம் சிவராமன் இயக்கத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த்

சென்னை: டிராமா கம்பெனி என்ற நிறுவனம் சார்பில் பாலமுருகன்.அ தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற பிளாக்பஸ்டர் படத்தின் இயக்குனரும், ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவருமான அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கின்றனர். ஷிவானி நாகாரம் ஹீரோயினாக நடிக்கிறார். கவுதம் சிவராமன்‌ இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், சி.பிரேம்குமார், கலைப்புலி எஸ்.தாணு, மணிகண்டன், கென் கருணாஸ், ஆர்.டி.ராஜா, ஆவுடையப்பன், ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி.ராம் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

முக்கிய வேடங்களில் யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் நடிக்கின்றனர். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். சுரேஷ் எடிட்டிங் செய்ய, சுவாதி ராமகிருஷ்ணன் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் பிற அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: