யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ ருத்ராவுடன் இணைந்தார் பிரீத்தி

 

சென்னை: குறும்படங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து விக்கி பாஸ்கர் எழுதி இயக்கியுள்ள படம், `யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’. ஏபி இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன் தாஸ் வாத்வா, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். `ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாகவும், பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி, அனுபமா நடித்துள்ளனர். இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கையை மையமாக வைத்து, ஃபீல்குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக படம் உருவாகியுள்ளது. நவீன கால காதலியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன் சந்திக்கும் பிரச்னைகளே கதை. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுகிறது.

Related Stories: