ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படத்தை அவருடைய அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. தமிழில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய ரா.கார்த்திக், இப்படத்துக்கு மிகவும் வித்தியாசமான திரைக்கதை அமைத்து எழுதி இயக்குகிறார். முக்கிய வேடத்தில் தபு நடிக்கிறார். அவரும், நாகார்ஜூனாவும் 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். கடந்த 1996ல் அவர்கள் நடித்து வெளியான ‘நின்னே பெல்லாடடா’ என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. கடைசியாக 1998ல் வெளியான ‘ஆவிடா மா ஆவிடே’ என்ற படத்தில் அவர்கள் நடித்திருந்தனர். தற்போது 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்கின்றனர். பெயர் சூட்டப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் தனது சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பதற்காக ஐதராபாத் வந்துள்ள தபு, அதுகுறித்து தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
