சின்ன பட்ஜெட் பெரிய வெற்றி: புஷ்கர் – காயத்ரி கணிப்பு

சென்னை: வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குனரான ஏ.சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ வெப்தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் வரும் மே 15ம் தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான எக்ஸாம் இணைய தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புஷ்கர் – காயத்ரி, ஏ. சற்குணம், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புஷ்கர்-காயத்ரி பேசுகையில், ‘‘நாங்கள் ‘வா குவாட்டர் கட்டிங்’ எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, ‘பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்’ என எடுத்துச் சொன்னோம். அதைத்தான் ஓடிடியிலும் செய்து வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: