புதுமையான ஹீரோ க்ரித்திக் மோகன் ஆசை

சென்னை: கடந்த 2024ம் ஆண்டு விதார்த் நடித்து வெளியான ‘அஞ்சாமை’ என்ற படத்தின் மூலம் இளம் நடிகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் க்ரித்திக் மோகன். அப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக நடித்து ரசிகர்களை கலங்க வைத்த அவர் தற்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ‘பிரேக்பாஸ்ட்’ என்ற படத்தில் காதல் மனைவியிடம் அன்பு போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து, காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் நடித்து பெயர் பெற்றார்.

முன்னதாக 2016ல் விஜய் வசந்த் நடிப்பில் வெளிவந்த ‘அச்சமின்றி’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான க்ரித்தி மோகன் அதன்பிறகு தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கவில்லை.
அவர் அடுத்ததாக ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர, மேலும் 2 பெரிய படங்களில் கமிட்டாகி உள்ளார். தமிழ் சினிமாவில் புதுமையான ஹீரோவாக நடிப்பதே ஆசை என்கிறார்.

Related Stories: