சென்னை: மேக்னாஸ் வேற மாறி புரொடக்ஷன் மற்றும் ரேகாஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்க, பி.டி. மெர்சிண்டோ ஜயமக்மூர் இணைந்து வழங்கும் படம் ‘ரேகாஸ் கபடி குழு’. இயக்குநர்கள் மேக்னா – ஜே.டி.ஜே இயக்கத்தில், பூஜையுடன் இந்த படம் தொடங்கியது. நட்டி, மேக்னா, டிஎஸ்ஆர், முனார் ரமேஷ், பி எல் தேனப்பன், வினோத் சாகர், ரேஷ்மா, நந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர், தயாரிப்பாளர், நாயகி மேக்னா படம் பற்றி கூறியதாவது, ‘‘முன்னதாக நாங்கள் டிவிகே என்ற படம் செய்தோம் அப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இந்தப்படம் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை பற்றியும் அதில் பெண்களின் பங்கு என்ன என்பதையும் சொல்லும் வித்தியாசமான படைப்பாக இருக்கும். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் படைப்பாக இருக்கும்’’ என்றார். ஒளிப்பதிவு ஆர்.என். சிவகுமார்,டி. வினோத் ராஜா,எடிட்டிங் KBREDIX, சண்முகம். விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
