சென்னை: பிரதீப் ரங்கநாதன் உதவியாளர் சுபாஷ் கே.ராஜ் எழுதி இயக்கிய படம், ‘பிளாஸ்ட்’. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கலபாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜூன் சிதம்பரம், விவேக் பிரசன்னா நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார்.
பிரதீப் இ.ராகவ் எடிட்டிங் செய்ய, வீரமணி கணேசன் அரங்கம் அமைத்துள்ளார். பீனிக்ஸ் பிரபு சண்டை பயிற்சி அளித்துள்ளார். கிரியேட்டிவ் புரொடியூசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம் பணியாற்றியுள்ளனர். அன்பான குடும்பத்துக்கும், தீமை செய்யும் பயங்கரவாத கும்பலுக்கும் இடையே நடக்கின்ற சம்பவங்கள்தான் படத்தின் கதை.
