நான் உன் அம்மாவா? ரசிகரை கடிந்த ஸ்ருதிஹாசன்

சென்னை: பாடகியாகவும் நடிகையாகவும் உள்ள ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் ‘பவழ மல்லி’ ஆல்பம் பாடலை பாடி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றார். இந்நிலையில், பொது இடத்துக்கு செல்லும் ஸ்ருதி ஹாசனை போட்டோ கலைஞர்கள் சுற்றி வீடியோ எடுக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இணையத்தில் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், மும்பைக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர், ‘ஹாய் அம்மா’ என்று கூறியிருக்கிறார். உடனே ஸ்ருதி ஹாசன் கோபத்துடன், ‘ஹே நான் என்ன உன் அம்மாவா?’ என்று காட்டமாக கேட்டுள்ளார். இதனால் அந்த நபர் அமைதியாகிவிட்டார். இந்த சம்பவத்தால் அங்கு
சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories: