சென்னை: தனது 60 ஏக்கர் நிலத்தை ரூ.100 கோடிக்கு விற்றுள்ளார் நடிகை மீனா. 2009ம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பரை மீனா மணந்தார். நுரையீரல் தொற்று காரணமாக, சில வருடங்களுக்கு முன் அவரது கணவர் இறந்தார். மீனா தற்போது நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருந்தபோது, சென்னையில் பல பகுதிகளில் வீடுகள், நிலங்களை வாங்கினார். தற்போது அவர் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். சாலிகிராமம், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களிலும் அவருக்கு வீடுகள் இருக்கின்றன. 90களில் அவர் வண்டலூரில் 60 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். அங்கு சிறியதாக பண்ணை வீடும் வைத்திருந்தார். அந்த நிலத்தை இப்போது அவர் ரூ.100 கோடிக்கு விற்றுள்ளாராம். திடீரென இவ்வளவு பெரிய தொகைக்கு விற்று மீனா என்ன செய்யப்போகிறார்? புதிதாக பிசினஸ் ஏதாவது தொடங்கப்போகிறாரா? என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
