- சிம்பு
- சென்னை
- அரசன்
- இசாரி கணேஷ்
- வெற்றிமாறன்
- விஜய் சேதுபதி
- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
- சங்கம்
சென்னை: சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அளித்த புகாரின் காரணமாக அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி நடிக்கும் ‘அரசன்’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு முன்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.5 கோடியை சிம்பு வாங்கியிருக்கிறார். இதனால் தனது படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐசரி கணேஷ் புகார் அளித்தார். தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை காரணமாக, பெப்சி அமைப்பின் தொழிலாளர்கள் யாரும் அரசன் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இதையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிம்பு தரப்பில் கூறும்போது, ‘‘ஐசரி கணேஷ் முன்பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிம்புவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அப்படியிருந்தும் இப்போது படத்தை நிறுத்துவது சரி கிடையாது’’ என்றனர்.
