×

முதல் முறையாக டப்பிங் பேசிய மாளவிகா

சென்னை: சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ளார், மாளவிகா. அவர், இன்று திரைக்கு வரும் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து மாளவிகா கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்திருந்தாலும், இந்த படத்தில்தான் முதல்முறையாக நான் சொந்தக்குரலில் பேசியிருக்கிறேன்.

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தில், சுந்தர் சி.பாபு இசையில் கானா உலகநாதன் எழுதி பாடிய ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்ற பாடல் காட்சியில் நான் ஆடியிருந்தேன். அது சூப்பர் ஹிட்டானது. அந்த பாடலின் வரி போல், ‘எல்ஐகே’ படத்தில் எனது கேரக்டருக்கு ‘வாளமீனு’ என்று சூட்டியுள்ளனர். என்னை சொந்தக்குரலில் பேச வைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடித்திருப்பது அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று பெரிதும் நம்புகிறேன். இனிமேல் தொடர்ந்து எல்லா மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்’ என்றார்.

Tags : Malavika ,Chennai ,Love ,Mysskin ,Sundar ,
× RELATED சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் அந்தரன்