சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் டாக்டர் கவுதம் சிகாமணி (47). இவர் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக உள்ளார். இவர், நேற்று சென்னையில் தங்கியிருந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன் (78), நேற்று திடீரென உடல்நல பாதிப்பு காரணமாக அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது….
The post தனியார் மருத்துவமனையில் திமுக எம்பி, அதிமுக எம்எல்ஏ அனுமதி appeared first on Dinakaran.