அதிமுக ஆட்சியில் கட்டிய 22,000 குடியிருப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சி: அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2020 வரை  குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட 22 ஆயிரம் குடியிருப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்ற நிலையில் இருப்பதாக புகார் எழுந்தது. தரமற்ற கட்டிடம் கட்டப்படுவதை முறையாக கண்காணிக்காமல் இருந்ததாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், ‘‘கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்த குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2020 வரை குடிசை மாற்று வாரியத்தால் மொத்தம் 22,907 குடியிருப்புகள் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் அயோத்தியா குப்பம், அகில இந்திய வானொலி திருவொற்றியூர், நாகூரான் தோட்டம், பி.எஸ்.மூர்த்தி நகர், நொச்சிக்குப்பம், சேனியம்மன் கோயில், மூர்த்திங்கர் தெரு, இந்திரா காந்தி குப்பம், டோபிகானா பகுதி, நல்ல தண்ணீர் ஓடை குப்பம், மணலி புதுநகர் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம், திருச்சி மாவட்டம் நாகமங்கலம், நாகை மாவட்டம் வெங்காய கூடை முடைவோர் காலனி, மதுரை மாவட்டத்தில் புரட்சித்தலைவர் காலனி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிலோன் காலனி, கோவை மாவட்டத்தில் மதுக்கரை அண்ணாநகர், கீரநத்தம் காந்தி நகர், மலுமிச்சம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அறிவொளி நகர், நாமக்கல் மாவட்டத்தில் நாகராஜபுரம், நிலவங்கி திட்டம் பகுதி 3, தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நகர், கோவில்பட்டி நில வங்கித்திட்டம் பகுதி ஒன்று, நில வங்கித் திட்டம் பகுதி 2, வேலூர் மாவட்டத்தில் குளவிமேடு, மதுரை மாவட்டத்தில் பூங்கா நகர், திருநெல்வேலி மாவட்டத்தில் வ.உ.சி. நகர், ஈரோடு மாவட்டத்தில் பவானி சாலை, சேலம் மாவட்டத்தில் வெள்ளைகுட்டை ஏரி, ஐய்யம்பெருமாள்பட்டி, கோட்ட கவுண்டம்பட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார் பட்டி பகுதி 3, ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டிணம் காத்தான் , கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் பகுதி ஒன்று, உக்கடம் பகுதி இரண்டு, கரூர் மாவட்டம் சணப்பிரட்டி, திருப்பூர் மாவட்டம் பாரதி நகர், ஜெயா நகர் உள்ளிட்ட 51 திட்டப்பகுதியில் மொத்தம் 22,097 குடியிருப்புகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 22,097 குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகள் அனைத்தும் தரமானதா என ஆய்வுக்கு உடனடியாக உட்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற கட்டிடம் என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை வைத்துள்ளனர்.எந்தெந்த ஆண்டில் கட்டப்பட்ட குடியிருப்புகள்ஆண்டு        குடியிருப்பு    மதிப்பீடு2011-2016        26,633        ரூ.1261.81 கோடி2017-2020        22,907        ரூ.1658.51 கோடி…

The post அதிமுக ஆட்சியில் கட்டிய 22,000 குடியிருப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: