புளியந்தோப்பில் கட்டிய நிறுவனம்தான் இங்கும் டெண்டர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி தரமாக கட்டப்படுகிறதா?….சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சந்தேகம்

சென்னை: சென்னை புளிந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை தொடர்ந்து திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தரமற்ற நிலையில் பி.எஸ்.டி. நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.  கைவைத்தால் பெயர்ந்து விழும் சிமெண்ட் கலவைகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியை கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கடந்த மே 19ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு  ரூ.385 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டிடங்கள் ரூ. 143 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டிடங்கள் ரூ.165 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலும் குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை ரூ.77 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன.  இன்னும் சில மாதங்கள் கட்டிடப் பணிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் தரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது.கடந்த ஆண்டு மே  மாதம் 19ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல்  நாட்டியது குறிப்பிடத்தக்கது.புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய அதே பி.எஸ்.டி நிறுவனம் தான் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை தரமற்ற நிலையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கைவைத்தாலே பெயர்ந்து விழும் நிலையில் சிமென்ட் கலவைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கல்லூரியை   பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாக மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி தமிழக அரசு  கட்டிட உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post புளியந்தோப்பில் கட்டிய நிறுவனம்தான் இங்கும் டெண்டர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி தரமாக கட்டப்படுகிறதா?….சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சந்தேகம் appeared first on Dinakaran.

Related Stories: