வரலாற்று திரிபுகளை தடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை:  வரலாற்று திரிபுகளை தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஏழை குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் என்று மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் முட்டை கொடுத்தவர் கருணாநிதி. எனவே இந்த திட்டத்தில் பலருக்கும் சம்பந்தம் இருக்கும் நிலையில் திட்டத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். இதுபோன்ற வரலாற்று திரிபுகளை தடுக்க வேண்டும். கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு நேர்முக உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது. அதுபோன்ற நடவடிக்கையை தமிழகத்திலும் செய்ய பரிசீலிக்க வேண்டும். கடலூர் அஞ்சலை அம்மாளுக்கு சிலை நிறுவ வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில், நினைவு தூண்களை நிறுவ வேண்டும். இந்த நாட்டில் பல சித்தாந்தங்களின் கீழ் செயல்படுகிறார்கள். ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. கல்புர்கி, கவுரிலங்கேஸ்கர் மற்றும் காந்தியை கொன்றது யார் என பாஜ உறுப்பினர் விளக்க வேண்டும். மகாத்மா காந்தியை கொன்றவருக்கு சிலை அமைப்போம் என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதி, அதிக விபத்து ஏற்படும் பகுதியாகும். அங்கு நடமாடும் மருத்துவமனை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post வரலாற்று திரிபுகளை தடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: