காஸ் விலை தொடர்ந்து உயர்வு விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளுகிறது அரசு: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் சமையல் காஸ் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் காஸ் சிலிண்டர் ரூ.875 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே, காலி சிலிண்டருடன் பங்கேற்று கூறியதாவது: காஸ் விலை உயர்வு, பெண்களுக்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது. இதன் மூலம் ஏழை மக்களை மீண்டும் வறட்டி, விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு அரசு தள்ளுகிறது. காஸ் விலையை நிர்ணயிக்கும் சவுதி அராம்கோ நிறுவனம் சிலிண்டருக்கு நிர்ணயித்துள்ள நிஜமான விலை ரூ.600 மட்டுமே. நாம் ரூ.275 அதிகமாக தருகிறோம். கடந்த 9 மாதங்களில் ரூ.265 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு அரசு மானியமும் தருவதில்லை. சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.  இவ்வாறு அவர் கூறினார்….

The post காஸ் விலை தொடர்ந்து உயர்வு விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளுகிறது அரசு: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: