ஒன்றிய அரசை கண்டித்து மணமக்களுக்கு பெட்ரோல் பரிசு நடிகர் மயில்சாமி வழங்கினார்

சென்னை: ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக மணமக்களுக்கு பெட்ரோல் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் மயில்சாமி. தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. கடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு மயில்சாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது உறவினர் ஒருவரது வீட்டு திருமணத்துக்கு அவர் சென்றிருந்தார். அப்போது இரண்டு கேன்களில் பெட்ரோலை நிரப்பி அதை மணமக்களுக்கு பரிசாக வழங்கினார். இதுபற்றி மயில்சாமி கூறும்போது, ‘திமுக ஆட்சியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். அதே சமயம், ஒன்றிய அரசு தொடர்ந்து இதுபற்றி கவலையில்லாமல் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது. மக்கள் விரோத போக்கை கையாள்கிறது. அதை கண்டிக்கும் விதமாக மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளித்தேன்’ என்றார்….

The post ஒன்றிய அரசை கண்டித்து மணமக்களுக்கு பெட்ரோல் பரிசு நடிகர் மயில்சாமி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: