அசையும் சொத்துகளின் மதிப்பு 10 ஆண்டில் ரூ.43 கோடி அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் சொத்துக்குவிப்பு புகார்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் சொத்துக்குவிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2011 – 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.65 கோடி மதிப்புக்கு கே.சி.வீரமணி சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. 2011-ல் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.7.48 கோடி ஆகும். 2011-2021 வரை கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.91.20 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது. கே.சி.வீரமணி பெயரில் வாங்கப்பட்டு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.,06,27,147 என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கே.சி.வீரமணியின் உறவினர் கே.ஏ.பழனி பெயரில் ரூ.92.21.593 மதிப்புள்ள அசையும் சொத்து வாங்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹோம் டிசைனர் அண்ட் ஃபேப்ரிகேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.15 கோடிக்கு அசையா சொத்து வாங்கப்பட்டுள்ளன. வி.பி.ஆர்.ஹில் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் பெயரில் ரூ.7 கோடி மதிப்புக்கு சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஹில்ஸ் திருப்பத்தூர் நிறுவனம் பெயரில் ரூ.6 கோடிக்கு சொத்து வாங்கப்பட்டுள்ளது. அகல்யா, பத்மாசினி பெயரில் ரூ.3.2 கோடிக்கு அசையும் சொத்தும் ரூ.15.9 லட்சத்துக்கு அசையா சொத்தும் வாங்கப்பட்டுள்ளது. 2011 -ல் இருந்து 2021 வரை கே.சி.வீரமணி கடன் தொகையை கழித்த பிறகு சொத்து மதிப்பு ரூ.83.65 கோடியாக உள்ளது. 10 ஆண்டுகளில் கே.சி.வீரமணியின் வருமானம் மூலமான அதிகபட்ட சேமிப்பு ரூ.7 கோடியாகும். கடனுக்கு பிந்தைய சொத்து மதிப்பான ரூ.83.65 கேரியில் இருந்து சேமிப்பு கழித்தால் நிகர சொத்து மதிப்பு ரூ.76.65 கோடி ஆகும். பத்திரப்பதிவின் போது வழிகாட்டி மதிப்பைவிட சொத்து மதிப்பை குறைத்து காட்டி கே.சி.வீரமணி மோசடி செயத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு 10 ஆண்டில் ரூ.43 கோடி அதிகாித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் பெயரிலும் பெங்களூரு, சென்னை, திருப்பத்தூரில் சொத்து வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒசூா் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் ஒரு ருபாய் குத்தகை கட்டணத்தில் அவரது நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. சிப்காட் வழங்கிய நிலத்தில் ரூ.15 கோடியில் ஒசூர் ஹில்ஸ் ஹோட்டலை கே.சி.வீரமணி நிறுவனம் கட்டி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாயார், சகோதரி பெயரில் சொத்து வாங்கி தன் பெயருக்கு கே.சி.வீரமணி தானப்பத்திரம் மூலம் மாற்றி கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாமனார் பெயரில் வாங்கிய 100 ஏக்கர், தானப்பத்திரம் மூலம் ஆர்,எஸ்.கல்வி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. …

The post அசையும் சொத்துகளின் மதிப்பு 10 ஆண்டில் ரூ.43 கோடி அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் சொத்துக்குவிப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: