×

ராகுல் அசோக் இயக்கத்தில் ‘வெஞ்சென்ஸ்’ அரசியல் கதையில் அபர்ணதி

சென்னை: ஏசி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்க, ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி முதன்மை வேடத்தில் நடித்துள்ள பரபரப்பான அரசியல் கதை கொண்ட படம், ‘வெஞ்சென்ஸ்’. முக்கிய வேடங்களில் காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. பாடல்களுக்கு கார்த்திக்ராஜா இசை அமைக்க, அருண் ராஜ் பின்னணி இசை அமைத்துள்ளார். இம்ரான் எடிட்டிங் செய்ய, வைரபாலன் அரங்கம் அமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ஜெயில்’, ‘தேன்’, ‘உடன்பால்’, ‘டீமன்’, ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களில் நடித்துள்ள அபர்ணதி, இப்படத்தில் இதுவரையில் இல்லாத சவாலான கேரக்டரை ஏற்றுள்ளார். படம் குறித்து ராகுல் அசோக் கூறுகையில், ‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் அரசியல் பின்னணியில் இப்படம் பேசுகிறது. அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தரமான படங்களுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் ரசிகர்கள், ‘வெஞ்சென்ஸ்’ படத்துக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். பல குறும்படங்களை இயக்கியுள்ள நான், இப்போது திரைப்படம் இயக்கியுள்ளேன்’ என்றார்.

Tags : Aparnathi ,Rahul Ashok ,Chennai ,A.P. Ashok Kumar ,AC Productions ,Kali Venkat ,John Vijay ,Ilavarasu ,Livingston ,Y.G. Mahendran ,Karthikraja ,Arun Raj ,Imran ,Vairapalan ,M.S. Prabhu ,
× RELATED கிளாமருக்கு காஜல் கொடுத்த விளக்கம்