×

அவந்திகாவுக்கு கிடைத்த சுதந்திரம்

சுந்தர்.சி, குஷ்பு தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா ஆகிய மகள்கள் இருக்கின்றனர். இதில் அவந்திகா நடிக்கும் முதல் படம் மலையாளம் மற்றும் தமிழில் உருவாகிறது. ‘ஆரம்பம்’ என்ற இப்படத்தை சுஜேஷ் இயக்குகிறார். தவிர சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் நடிக்கின்றனர். முதல் நாள் படப்பிடிப்பில் பங்கேற்ற அவந்திகாவை அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். கதை கேட்டு நடிக்கும் முடிவை அவந்திகாவே எடுக்க வேண்டும் என்று குஷ்பு சொல்லி விட்டார். தமிழில் உருவாகும் ‘டபுள் ஆக்குபன்ஸி’ என்ற படத்திலும் அவந்திகா நடிக்கிறார்.

அவர் கூறுகையில், ‘நான் சினிமாவில் நடிக்கும் ஆசையை சொன்னபோது, ‘இது சாதாரண விஷயம் இல்லை. கடினமான வேலை. கவனமாக இருக்க வேண்டும்’ என்று அம்மா அட்வைஸ் செய்தார். தற்போது எனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். என்னை அம்மாவுடன் இணைத்து ஒப்பிடுவார்கள். அவர் நடித்தது போன்ற ரோல் கிடைத்தால், கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறேன். சுந்தர்.சி, குஷ்புவின் பெண் என்பதால், எனக்குள் இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருக்கிறது.

அதனுடன் எனது உழைப்பையும் சேர்த்து, அம்மாவின் பெயரை கெடுக்காமல் திரைத்துறையில் முன்னேறுவேன். எனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்த அம்மா, அப்பாவுக்கு நன்றி. தற்போது சில கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோயினாக புகழ்பெறுவேன்’ என்றார்.

Tags : Avantika ,Sundar.C ,Khushbu ,Anantika ,Sujesh ,Saritha ,Indrans ,Kalabhavan Sajon ,
× RELATED 4த் ஃப்ளோர் விமர்சனம்…