
பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்த காஜல் அகர்வால், தனது நீண்ட நாள் காதலர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு, நீல் கிட்ச்லு என்ற மகனுக்கு தாயாகி, மும்பை வீட்டில் வசித்து வருகிறார். தமிழில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து முடித்துள்ள அவர், தற்போது 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது கிளாமர் போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கவர்ச்சி என்பது நடிப்பின் இன்னொரு பரிமாணம். யாரும் அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் எந்த தவறும் இல்லை. நடிகையின் பயணத்தில், திருமணம் என்பது எல்லைக்கோடு அல்ல’ என்றார்.

