×

ஜி.வி படத்தில் வைஷ்ணவி, மாளவிகா

செல்வராகவன் எழுதி இயக்கும் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை தயாரித்து இசை அமைத்து ஹீரோவாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், அடுத்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிக்கிறார். ‘ஹாட் ஸ்பாட் 1’, ‘ஹாட் ஸ்பாட் 2’ ஆகிய படங்களின் இயக்குனரும், நடிகருமான அவர், இதற்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ‘அடியே!’ என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது அவர் இயக்கும் படத்தில், தெலுங்கில் ‘பேபி’ என்ற படத்தில் நடித்த வைஷ்ணவி சைதன்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதையடுத்து ‘ஜோ’ படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ராம்.எஸ் டைரக்‌ஷனில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு மாளவிகா மனோஜ் ஜோடியாக நடிக்கிறார். இவ்விரு படங்களுக்கான பிரீ-புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே அவர் நடித்துள்ள ‘4ஜி’, ‘இடி முழக்கம்’, ‘அடங்காதே’, ‘13’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஹேப்பி ராஜ்’, ‘இம்மார்ட்டல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

Tags : Vaishnavi ,Malavika ,GV ,GV Prakash Kumar ,Selvaraghavan ,Vignesh Karthik ,Vaishnavi Chaitanya ,
× RELATED 4த் ஃப்ளோர் விமர்சனம்…