சென்னை: கட்சி சேர, ஆச கூட, சித்திர புத்திரம் விழி வீக்குர உள்ளிட்ட ஆல்பம் பாடல்களால் புகழ் பெற்ற சாய் அபயங்கர், தமிழ் சினிமாவில் பிரபலமாகி வருகிறார். இவரது இசையில் வெளியான ‘டியூட்’ படம் ரூ.100 கோடி வசூலித்தது. இப்போது, கருப்பு, பென்ஸ், மார்ஷல், அல்லு அர்ஜுன் – அட்லி, தனுஷ் 55 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை தேவயானி சமீபத்தில் ஒரு மேடையில் சாய் அபயங்கரை பார்த்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், முதலில் சாயுடைய அம்மா, அப்பாவுடைய ரசிகை நாங்கள், இப்போது சாயுடைய ரசிகர். என் மகள் இனியா சாய் அபயங்கருடைய ரசிகை, அவள் நல்லா பாடுவா தெரியுமா? உங்கள் இசையில் பாடுவது அவளுடைய ஆசை, அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அவள் என்னை கூப்பிட்டு போயிருக்கலாமே என்று கூறுவாள். நிறைய படங்கள் பண்ணுங்க, இசை பண்ணுங்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று தேவயானி கூறியிருக்கிறார். இதை கேட்டுவிட்டு, சாய் அபயங்கர் புன்னகைத்தபடி நிற்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
