×

ஆபரேஷனால் உடல் எடை கூடியது; பாடி ஷேமிங் பண்றாங்க: இனியா குமுறல்

சென்னை: வாகை சூட வா படத்தில் ஹீரோயினாக நடித்து கவனம் ஈர்த்தவர் இனியா. நான் சிகப்பு மனிதன், புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பட வாய்ப்புகள் குறைந்த பிறகு உயர்ரக ஆடைகளை வாடகைக்கு தரும் பிசினஸில் ஈடுபட்டார். சிறு இடைவெளிக்கு பிறகு ஸ்வீட்டி நாட்டி கிரேசி என்ற படத்தில் அவர் நடித்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கள்ளக்காதலில் ஈடுபடுவது போலவும் படுக்கையறை காட்சிகளிலும் இனியா நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் உடல் எடையை ஆதிகரித்து ஆளே மாறியபடி நடித்துள்ளார். சில ஆன்ட்டிபோல் இருப்பதாக அவரை கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் அவரிடம் வாகை சூட வா படத்தில் ஒல்லியாக இருந்தீங்க, இப்போ உடல் எடை அதிகரித்து ஆன்ட்டியாக மாறிவிட்டீர்கள், இதனால் தான் படவாய்ப்பு வரவில்லையா என்று யூடியூபர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு இனியா, ‘‘நான் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு சமீபத்தில் கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடந்தது.

அதனால் சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனது. இதனால் உடல் எடை அதிகரித்துவிட்டது. ஒரு நடிகை குண்டாடிவிட்டார் என்பதற்காக அவர் ஆன்ட்டி, அக்கா ரோல்களில் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குண்டாக இருப்பது பெரிய தவறு இல்லை. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள், ஆனால் நான் இப்போதும் படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்னை பாடி ஷேமிங் செய்கிறார்கள் என்று கவலையுடன் கூறியுள்ளார் இனியா.

Tags : Iniya Kumural ,Chennai ,Iniya ,Naan Sigappu Manithan ,Puliwal ,
× RELATED வாசனை, சுவை அறியும் திறன் பறிபோனது: மம்மூட்டி பகீர்