×

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்: செல்போன்களுக்கு தடை; ஊடகத்திற்கு அனுமதியில்லை

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம், வரவேற்புக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஊடகத்திற்கும் அனுமதி வழங்கவில்லையாம். தென்னிந்திய திரையுலகில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஜோடி மிகவும் பிரபலம். இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவித்தது இல்லை. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவிற்கு வரும் 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளது.

இருவரும் திரையுலகில் இருந்தாலும் பிரபலங்கள் யாரையும் தங்களது திருமணத்திற்கு அழைக்கவில்லை. நெருங்கிய உறவினர்கள், ஒருசில பிரபலங்கள் மட்டும் அழைக்கப்படுகின்றனர். அதிலும், ‘திருமணத்தின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் கசியக்கூடாது’ என்பதற்காக, விருந்தினர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு மார்ச் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். விரைவில் தங்களுடைய திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே தங்களுடைய திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை தொடங்கியிருக்கின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு இருவருமே ஒரு மாதம் சோஷியல் மீடியா மற்றும் சினிமா பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணத்தையும் வரவேற்பையும் கண்டிப்பாக தனிப்பட்டதாக வைத்திருக்க இந்த ஜோடி முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சில நாட்களுக்கு பிறகு ஐதராபாத்தில் செய்தியாளர்களுடன் ஒரு சிறப்பு உரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Vijay Deverakonda-Rashmika ,Hyderabad ,Vijay Deverakonda- ,Rashmika ,Vijay Deverakonda ,Rashmika Mandanna ,Udaipur, Rajasthan ,
× RELATED வாசனை, சுவை அறியும் திறன் பறிபோனது: மம்மூட்டி பகீர்