சென்னை: ஜேபி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிக்க, ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கியுள்ள படம் ‘LSS’ என்கிற ‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’. வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது. ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி வைத்தியநாதன், ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் நடித்துள்ளனர். என்.எஸ்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்ய, ரஜினி சேகர் அரங்கம் அமைத்துள்ளார். தளபதி தினேஷ் சண்டைப் பயிற்சி அளிக்க, அசோக் அமிர்தராஜ் கதை, வசனம் எழுதியுள்ளார். தீனா, கிருஷ்ணா நடனப் பயிற்சி அளித்துள்ளனர். சினேகன், அருண்பாரதி, மணி அமுதவாணன், இயக்குனர் சரண் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படம் குறித்து ஆதவ் கிருஷ்ணா கூறுகையில், ‘கதை விவாதம் முதல் பாடல்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குனர் எனக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவருடைய ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது’ என்றார். சிம்ரன் அத்வானி கூறும்போது, ‘படம் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொல்வதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார். தயாரிப்பு நிர்வாகி ஆர்.பி.பாலகோபியின் மகன் ஆதவ் கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
