பூக்கி: விமர்சனம்

பல வருடங்களாக காதலித்து வரும் அஜய் தீஷன், ஆர்.கே.தனுஷா ஜோடி, திடீரென்று தங்களுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதலால் பிரிகின்றனர். காதல் தோல்வியில் இருந்து மீள இன்னொரு காதல்தான் மருந்து என்று நினைத்து, இருவரும் வெவ்வேறு காதலை நாடுகின்றனர். அந்த காதலாவது ஜெயித்ததா என்பது மீதி கதை. இருவேறு உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்திய அஜய் தீஷன், ஆர்.கே.தனுஷா ஜோடி, இளம் தலைமுறையை கவர்வது உறுதி. தனது மகன் அஜய் தீஷன் சொந்த வீடு வாங்கியதை பார்த்து உருகும் காட்சியில், கண்கலங்க வைக்கிறார் பாண்டியராஜன்.

அவரது மனைவியாக இந்துமதி மணிகண்டன், குருஜியாக சுனில், மனநல மருத்துவராக லட்சுமி மன்ச்சு மற்றும் ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, சத்யா, அஷ்வின் ராம், ஷியாரா சார்மி, பிரியங்கா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா ஆகியோர் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். எடிட்டிங் செய்து, இசை அமைத்து, ஒரு பாடலுக்கு ஆடி, தனது பங்கை சிறப்பாக செய்துள்ள விஜய் ஆண்டனி, பின்னணி இசையில் காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளார். காதலை இன்னொரு கோணத்தில் சொல்கிறது, புதிய பரிதியின் கதை, திரைக்கதை, வசனம். ஆனால், முடிவு என்பது எதிர்பார்த்ததே. இன்றைய தலைமுறையினரின் மன ஓட்டத்தை பதிவு செய்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கணேஷ் சந்திரா, பழைய பாணியிலேயே காட்சிகளை நகர்த்தி இருப்பது சுவாரஸ்யத்தை குறைக்கிறது.

Related Stories: