கொரோனா விழிப்புணர்வு கோலம்

பூந்தமல்லி: தமிழகத்தில் கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதற்காக கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நகராட்சி சார்பில் பேருந்து நிலையம், கோயில்கள், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பூந்தமல்லி நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நாடகம் ஆகியவை ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், தலையில்லாமல் கொரோனா உருவத்தோடு வந்த நபர் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் இல்லாமல் இருந்த பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் கொரோனா சங்கலி தொடர் எப்படி பரவும் என்பதை தத்துரூபமாக நடித்துகாட்டினர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர் பழனி, கண்காணிப்பாளர்கள், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து இந்த நாடகத்தை நடத்தினர். மேலும், நகராட்சி அலுவலகம் எதிரே மிக பெரிய அளவில் கொரோனா உருவத்தை வண்ண பொடிகளால் கோலம் வரைந்தனர். பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன….

The post கொரோனா விழிப்புணர்வு கோலம் appeared first on Dinakaran.

Related Stories: