திருமயம் அருகே வி.கோட்டையூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர்கள் பங்கேற்பு

திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் வி.கோட்டையூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்ட துவக்க விழா கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ரகுபதி ‘மக்களைத் தேடி மருத்துவம்”திட்ட வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006-2011 ஆட்சிக் காலத்தில் ‘வரும் முன் காப்போம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சியிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய் கண்டறியப்பட்டவர்ளுக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்பொழுது அதைவிட கூடுதலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி முகாம்களை அனுப்புகின்ற பணியை செயல்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ‘மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பான திட்டத்தை தமிழகத்தில் துவக்கி வைத்துள்ளார்.தற்பொழுது இல்லங்கள்தோறும் நேரடியாக சென்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோய் இல்லா சமுதாயம் படைக்கும் வகையில் தாயுள்ளத்துடன் மக்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இத்திட்டத்தை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, ஆர்டிஓ அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், வளர்மதி, ஊராட்சி தலைவர் ராமதிலகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், கொத்தமங்கலத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். கலெக்டர் கவிதா ராமு தலைமையில் பொது ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி, மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆனந்தி இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மங்கையற்கரசி இராமநாதன், விஜயா செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post திருமயம் அருகே வி.கோட்டையூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: