சென்னை: நடிகர் தனுஷ் தயாரித்து வெற்றிமாறன் இயக்கி வே.இர.தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, முருகதாஸ், கிஷோர் ஆகிய பலரது நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் ‘விசாரணை’. இப்படம் போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், அடித்தட்டு மக்களின் வலி ஆகியவைகளை நேர்மையாகவும், தைரியமாகவும் திரையில் பதிவு செய்தது. எம்.சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற புத்தகத்தை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது மற்றும் வெனீஸ் நாட்டின் திரைப்பட விருது என உலகளவில் பல அங்கீகாரம் கிடைத்தது.
‘விசாரணை’ படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடினர். இதில் இயக்குனர் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குனர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
