சன் நெக்ஸ்ட்டில் மகேந்திரன் படம்

‘மாஸ்டர்’ படத்தில் இளம் வயது வில்லன் பவானியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மகேந்திரன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ‘நீலகண்டா’ என்ற படத்தில் நடித்துள்ளார். எல்.எஸ்.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.சீனிவாசலு, டி.வேணுகோபால் இணைந்து தயாரித்துள்ளனர். ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். மார்க் பிரசாந்த் இசை அமைக்க, ஸ்ரவன் ஜி.குமார் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்துள்ளார்.

மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹு லால், ராம்கி, பப்லு பிருத்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு சிவகார்த்திக் தன்டா நடித்துள்ளனர். கர்மா மீது அதிக நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையப்படுத்தி, அதிரடி ஆக்‌ஷன் ஜானரில் உருவான இப்படம், நேரடியாக சன் நெக்ஸ்ட்டில் வெளியாகியுள்ளது.

Related Stories: